என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை திருமணம்"
- வார்தா நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
- இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.
இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.
அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
- ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் இதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
- எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் இந்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த மசோதாவின்படி திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் ஈராக் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. கால மாற்றத்தில் சமீப காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது.
தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. 1959 இல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து இந்த உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. ஆனால் இந்த பிரிவு திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.
சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள்ளது. இந்நிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை சுட்டிக்காட்டி மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
- குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
- வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று.
நெல்லை:
தமிழகத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி பல மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத குழந்தைகள் சிலருக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் கலாசாரம் இன்றளவும் உள்ளது.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாக்குடி பகுதியில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே அந்த பகுதியில் உள்ள சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து குழந்தை திருமணங்களை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் வழக்கமாக பள்ளி மாணவர்களை கொண்டும், தன்னார்வலர்களை கொண்டும் விழிப்புணர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
ஆனால் சற்று வித்தியாசமாக குழந்தை திருமணங்களை தடுக்க நெல்லையை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் தானே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
நெல்லையை அடுத்த தச்சநல்லூரை சேர்ந்தவர் கோமதி கிருஷ்ணமூர்த்தி. இவர் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசுத்துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த பதவி உயர்வு பெற்று தற்போது நெல்லை மாவட்டம் முக்கூடல் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வருவாய் கட்டுப்பாட்டில் தான் பாப்பாக்குடி கிராமம் அமைந்துள்ளது.
அங்கு அதிக குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அறிந்து வேதனை அடைந்த கோமதி கிருஷ்ணமூர்த்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். இதற்காக அவரே களத்தில் இறங்கி கிராமிய கலையான வில்லுபாட்டை பாடி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றார்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பள்ளிகளில் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
வில்லுப்பாட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. அந்த கலை நயத்தை சற்று கூட குறைவில்லாமல் அதிகாரியாக இருந்தாலும் வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்ற கலைஞரை போன்று கோமதி கிருஷ்ணமூர்த்தி வில்லு பாடகியாகவே மாறி இருப்பார்.
இதற்காக பிரத்யேகமாக வில்லு கலைக்கு தேவைப்படும் மண்பானை, வில்லு வீசுகோல் ஆகியவற்றை அவரே தயார் செய்து வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து சமூக நலத்துறையை சேர்ந்த சமூகநலத்துறை அலுவலரான பத்மா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து வில்லுப்பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் கோமதி கிருஷ்ணமூர்த்தி முக்கூடலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தானே வேடமிட்டு நாடகம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் எமதர்மராஜா வேடம் போட்டு மது, கஞ்சா போன்ற போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து தத்ரூபமாக நடித்துக் காட்டி இருந்தார்.
இது குறித்து கோமதி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `பாப்பாக்குடி பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுவதாக அதை தடுக்க வேண்டும் என நாங்கள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுவாக நான் பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் இதுபோன்ற பொது மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் வைத்திருப்பேன். எனவே கிராமிய கலையான வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் எளிதில் புரியும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறினார்.
- வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
- குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.
குழந்தை திருமண தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 16 வயது சிறுமியுடன் 32 வயதுடைய வாலிபருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து அச்சிறுமியின் நிச்சயதார்த்தை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்ட விரக்தியில் இருந்த வாலிபர், அன்று இரவே கொடூரச் செயலை அரங்கேற்றினார். திருமணம் நிறுத்தப்பட்ட கோபத்தில், சிறுமியில் வீட்டிற்கு சென்ற அந்த வாலிபர், சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச் சென்றுள்ளார்.
வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாலக்கோடு அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது பதியப்பட்டுள்ளது.
- சமூக நல அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புலிக்கரை- சென்னம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பாலக்கோடு தாலுகா மோதுகுல அள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பூவரசன் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்து இருப்பதாக பாலக்கோடு மகளிர் ஊர்நல அலுவலருக்கு வந்த புகாரின் பேரில் அவர் பாலக்கோடு் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 17 வயதான சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வாலிபர் பூவரசனை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி வாலிபர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வாலிபர் சிறுமிக்கு தாலி கட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குழந்தை திருமண சட்டத்தின்படி வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
- காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
காங்கயம்:
குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
- செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- குழந்தை திருமணங்களுக்கு வறுமை, கல்வியறிவின்மையே காரணமாகும் என வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறுவயது திருமணங்களால் ஏற்படும் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடத் தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்புல் லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் வேளா னுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், குழந்தை திருமணம் பழங்கா லத்திலிருந்தே நடைமுறை யில் இன்றும் சில மாநிலங்க ளில் இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர் களின் உடல் மற்றும் மன முதிர்ச்சிக்கு முன்பே திரும ணம் செய்து வைக்கப்படுகி றார்கள்.
குழந்தைத் திருமணங்க ளுக்கான காரணங்கள் வறுமை, வரதட்சணை, கலாச்சார மரபுகள், மத மற்றும் சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை ஆகிய வையாகும். குழந்தைத் திரும ணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரிடையே ஏற்படுத்த வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சிறு வயது திருமணத்தால் சிறுமி யர்களுக்கு கல்வியும், பொருத்தமான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால் தாயும், சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலை மான் சதாம் உசேன் மற்றும் முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.
- வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் இளம் வயது பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதும் அதனால் இளம் வயதி லேயே குழந்தை பெறுவதும் தொடர் கதையாகி வருகிறது.
பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என்பது சட்டம். பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மசோதா மத்திய அரசின் சட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநி லங்களை சேர்ந்தவர்கள்.
குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பி ரதேசத்தில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் திருமணமான டீன் ஏஜ் பெண்கள் பிரசவத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதே போல் மாவட்ட த்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் 18 வயதுக்குட் பட்ட பெண்களுக்கும் திரு மணம் நடத்துவது அதிக ரித்துள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் குழந்ைத திருமணங்கள் அதிக ரித்துள்ளன.
சமீபத்திய ஆய்வில் ஊரக மற்றும் நகர்ப்பு றங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3338 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் அரசு தாலுகா மருத்துவ மனை, அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை களில் நடக்கும் டீன் ஏஜ் பிரசவங்களை கணக் கிட்டால் அதன் புள்ளி விவரங்கள் இன்னும் அதிகரிக்கும்.
குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- போலீசார் கடும் எச்சரிக்கை
- ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.
மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
தொண்டி
தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. இதற்கான பிரசார வாகனத்தை திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரமானது மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டிணத்தில் தொடங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ சமூகப்பணியாளர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.
- பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி கூட்டத்தை தொடங்கிவைத்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயி ற்றுநர் கவிதா வரவேற்றார்.
கூட்டத்தில மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், கொரோனா பெருந்தொற்றினால் மாண வர்களுக்குஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெ ய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் நீங்கள் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.
- சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர்.
பெரம்பூர்:
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இதுபற்றி குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்திய போது காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7-ந்தேதி எல்லையம்மன் கோவில் முன்பு தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. இதனை அவர்களது நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
தற்போது இது சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவரவர் வீட்டுக்கு வந்து விட்டனர்.
இதனால் சிறுமிக்கு திருமணம் ஆனது குறித்து வீட்டில் இருந்த உறவினர்களுக்கு தெரியவில்லை. திருமண வீடியோ பதிவு வெளியே வந்த பின்னர்தான் இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
போலீசார் விசாரணை நடத்துவது பற்றி தெரிந்ததும் அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடித்து மேலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது காதல் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பாலியல் ரீதியாக உறவில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறுமியை மீட்டு போலீசார் கெல்லீசில் உள்ள மையத்தில் தங்க வைத்து உள்ளனர். அவருக்கு ஆலோசனை வழங்க குழந்தைகள் நல அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
திருமணம் செய்த இருவரும் சிறுவன், சிறுமி என்பதால் அவர்கள் மீது என்ன மாதிரியான நட வடிக்கை எடுப்பது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
சிறுமியை, சிறுவன் திருமணம் செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்